/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்க்சிஸ்ட் ஜெயிக்க ‛'நாய் போல்' உழைத்தோம்; தி.மு.க., கூட்டணி இருந்தால் ஆட்சி அமைக்கலாம் மார்க்சிஸ்ட் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 'காரசாரம்' விவாதம்
/
மார்க்சிஸ்ட் ஜெயிக்க ‛'நாய் போல்' உழைத்தோம்; தி.மு.க., கூட்டணி இருந்தால் ஆட்சி அமைக்கலாம் மார்க்சிஸ்ட் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 'காரசாரம்' விவாதம்
மார்க்சிஸ்ட் ஜெயிக்க ‛'நாய் போல்' உழைத்தோம்; தி.மு.க., கூட்டணி இருந்தால் ஆட்சி அமைக்கலாம் மார்க்சிஸ்ட் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 'காரசாரம்' விவாதம்
மார்க்சிஸ்ட் ஜெயிக்க ‛'நாய் போல்' உழைத்தோம்; தி.மு.க., கூட்டணி இருந்தால் ஆட்சி அமைக்கலாம் மார்க்சிஸ்ட் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 'காரசாரம்' விவாதம்
ADDED : ஜூலை 30, 2025 12:31 AM
மதுரை :  'மதுரையில் மார்க்சிஸ்ட் ஜெயிக்க நாய் போல்' தி.மு.க., வினர் உழைத்ததால் வெற்றி பெற்ற அக்கட்சி எம்.பி., வெங்கடேசன், 'குப்பை மாநகராட்சி' என எப்படி விமர்சிக்கலாம்' என மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,வினர் கொந்தளித்தனர்.
அதற்கு 'கூட்டணி கட்சிகள் இருந்தால் தான் தி.மு.க., ஆட்சி அமைக்க முடியும்' என, மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் காரசார வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தில் மதுரை மாநகராட்சி கடைசி இடம் பெற்றது தொடர்பாக மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் மாநகராட்சியை விமர்சித்து, முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என நெருக்கடி தரும் வகையில் பேசியிருந்தார். நேற்று நடந்த மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இப்பிரச்னை எதிரொலித்தது.இதுவரை என்ன திட்டத்தை எம்.பி., கொண்டு வந்தார்.
தி.மு.க., கவுன்சில் தலைவர் ஜெயராம்: தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு மதுரைக்கு கடைசி இடம் ஒதுக்கி 'குப்பை மாநகராட்சி' என குறிப்பிட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் குப்பை அகற்றுவதில் சிறப்பாக செயல்படுகிறது. இது தெரியமல் எம்.பி., வெங்கடேசனும் குப்பை மாநகராட்சி என்கிறார். அவர் இதுபோல் மாநகராட்சியை இழிவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு முறை ஜெயித்து அவர் டில்லி செல்கிறார் என்றால் இங்குள்ள தி.மு.க.,வினர் தெருத்தெருவாக நாய் போல் அலைந்து ஓட்டு கேட்டு உழைத்ததால் தான். இதுவரை என்ன திட்டத்தை அவர் கொண்டு வந்தார். மாநகராட்சிக்கு அவர் என்ன நிதி ஒதுக்கினார்.
துணைமேயர் நாகராஜன் (மார்க்சிஸ்ட்): தவறான தகவலை தெரிவிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் கட்சியை குறை கூற வேண்டாம். எம்.பி., நிதியில் திட்டங்கள் நடந்துள்ளன. எய்ம்ஸ் வர போராடியவர்.
துணை மேயருக்கு ஆதரவாக அக்கட்சி கவுன்சிலர்கள், ஜெயராமுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவருக்கு ஆதரவாக தி.மு.க.,கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.
சமாதானப்படுத்திய மேயர் மேயர் இந்திராணி: கூட்டணிக்குள் மோதல் வேண்டாம். எம்.பி.,யின் அந்த விமர்சனம் மன வருத்தம் தருகிறது.
குமரவேல், (மார்க்சிஸ்ட்): எங்களுக்கு 2 தொகுதிகளில் தான் நீங்கள் தேர்தல் பணி செய்தீர்கள். 37 தொகுதிகளில் தி.மு.க.,வை ஜெயிக்க வைத்தது மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., காங்., வி.சி., என கூட்டணிகள் தான். 2026 தேர்தலிலும் கூட்டணி ஆதரவு இருந்தால் தான் நீங்கள் (தி.மு.க.,) ஆட்சி அமைக்க முடியும் என நினைக்க வேண்டும்.
இதையடுத்து அவர் பேசியதற்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். அவர்களை மேயர் சமாதானப்படுத்தினார்.
ரூ. ஆயிரம் கோடி ஊழல் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ராஜன் செல்லப்பா மேயராக இருந்த காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கவுன்சிலர் குமரவேல் வலியுறுத்தினார்.

