ADDED : செப் 30, 2025 04:22 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளை துாய்மையாக வைக்க 'துாங்கா நகரை துாய்மையாக்குவோம்' கோஷத்தை மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. இதற்காக கிராமங்களில் நுாறு சதவீதம் குப்பையை அகற்ற 'மாஸ் கிளீனிங்' முறையை அறிமுகப்படுத் தியுள்ளது.
முதற்கட்டமாக மாநகராட்சியை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் குறிப்பாக கிழக்கு ஒன்றிய கிராமங்களில் இப்பணியை மேற்கொள்கின்றனர்.
இவ்வகையில் ஒத்தக்கடை, காதக்கிணறு, கருப்பாயூரணி பகுதியில் இப்பணிகள் நடந்துள்ளன. இன்று (செப். 30) ஆண்டார்கொட்டாரம், சக்கிமங்கலத்தில் நடக்கிறது.
மாவட்ட கிராம பஞ்., உதவி இயக்குனர் அரவிந்த் கூறுகையில், ''கிராமங்களில் துாய்மை பராமரிக்க இயக்குனரகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டனர்.
முதற்கட்டமாக அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் கிழக்கு தொகுதியில் துாய்மைப் பணி துவங்கியது.
விரைவில் நகரையொட்டிய ஊராட்சிகளில் துாய்மைப் பணிசெய்தபின் மாவட்டம் முழுவதும் இதுதொடரும்'' என்றார்.