/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவியை பலாத்காரம் செய்த மாஸ்டர் தற்கொலை முயற்சி
/
மாணவியை பலாத்காரம் செய்த மாஸ்டர் தற்கொலை முயற்சி
ADDED : அக் 31, 2025 01:41 AM
நாகர்கோவில்:  கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் 29.  நாகர்கோவில் ராமன்புதூர் டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் பணிபுரிகிறார். நண்பர் யோகா மாஸ்டர் உதவியுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு டேக்வாண்டோ பயிற்சியும் அளித்து வருகிறார். போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்களை வெளியூருக்கு அழைத்து செல்வார்.
அக்., 11, 12 ல் மதுரையில் ஸ்கூல் கெயிம்ஸ் பெடரேஷன் நடத்திய டேக்வாண்டோ போட்டிக்கு மாணவர்களை பிரதீப் அழைத்து சென்றார்.  போட்டி முடிந்த பின் பெற்றோருடன் வந்த மாணவிகளை ஊருக்கு அனுப்பிய பிரதீப் தனியாக வந்த  பத்தாம் வகுப்பு மாணவியை மற்றொரு போட்டி இருப்பதாக தன் அறையில் தங்க வைத்தார்.
பின் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தார். வீடு திரும்பிய மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுததை தொடர்ந்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  பிரதீப் பயத்தில் தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போக்சோ வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் மதுரை நாகமலை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு மாற்றினர்.

