/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலைய விரிவாக்க நிலத்திற்கு இழப்பீடு பெறலாம்
/
விமான நிலைய விரிவாக்க நிலத்திற்கு இழப்பீடு பெறலாம்
விமான நிலைய விரிவாக்க நிலத்திற்கு இழப்பீடு பெறலாம்
விமான நிலைய விரிவாக்க நிலத்திற்கு இழப்பீடு பெறலாம்
ADDED : பிப் 15, 2025 05:12 AM
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக அதைச் சுற்றியுள்ள பகுதி கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தற்போதுள்ள விமான நிலையத்தின் ரன்வே மேலும் 2 கி.மீ., தொலைவுக்கு நீட்டிக்கப்பட உள்ளதால் இந்த நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலங்களுக்கான இழப்பீடு தொகையை 85 சதவீதம் பேர் பெற்றுள்ள நிலையில், மீதியுள்ளவர்கள் இழப்பீடு தொகை பெறாமல் உள்ளனர். இவர்களில் போதுமான ஆவணங்கள் இல்லாதவர்கள், வெளியூர்களில் உள்ளவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடுத்தவர்கள் உள்ளனர்.
மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தாலுகாக்களில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக அயன்பாப்பாக்குடி, குசவன்குண்டு, பாப்பானோடை, கூடல்செங்குளம், ராமன் குளம், பெருங்குடி கிராமங்களில் நிலங்கள் 2008 - 2009ல் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை விமான நிலைய விரிவாக்க தனித்தாசில்தார்களால் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை இழப்பீடு பெறாத நிலஉரிமையாளர்கள், அலுவலக வேலைநாட்களில் தங்கள் நிலஉரிமை தொடர்பான சான்று ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தின் முதல்தளத்தில் உள்ள மதுரை விமான நிலைய விரிவாக்க தனித்தாசில்தாரிடம் இழப்பீடு தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.