/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் விஜயகாந்துக்கு சிலை பரிசீலிப்பதாக மேயர் தகவல்
/
மதுரையில் விஜயகாந்துக்கு சிலை பரிசீலிப்பதாக மேயர் தகவல்
மதுரையில் விஜயகாந்துக்கு சிலை பரிசீலிப்பதாக மேயர் தகவல்
மதுரையில் விஜயகாந்துக்கு சிலை பரிசீலிப்பதாக மேயர் தகவல்
ADDED : ஜன 01, 2024 05:48 AM
மதுரை: மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு மதுரையில் சிலை வைக்க பரிசீலிக்கப்படும் என மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்தார்.
'விஜயகாந்த் பிறந்த ஊரான மதுரையில் அவருக்கு சிலை வைக்க மதுரை மாநகராட்சி அனுமதியும், இடமும் வழங்க வேண்டும்' என விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கதாகூர் மேயருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதுகுறித்து மேயர் கூறியதாவது: எம்.பி., கடிதம் அனுப்பியிருந்தார். காங்., கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும், '' என்றார்.
விஜயகாந்த்திற்கு மதுரையில் சிலை வைக்க தே.மு.தி.க., கூட கோரிக்கை வைக்காத நிலையில் காங்., வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.