/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்றும் பணி: மேயர் ஆய்வு
/
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்றும் பணி: மேயர் ஆய்வு
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்றும் பணி: மேயர் ஆய்வு
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்றும் பணி: மேயர் ஆய்வு
ADDED : டிச 11, 2024 04:36 AM
மதுரை,: மதுரையில் மண்டலம் 5க்கு உட்பட்ட குறிஞ்சிநகர், பாலாஜி நகர், சுந்தரராஜபுரம் பகுதிகளில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் நீரேற்றும் சோதனை ஓட்டச் செயல்பாடுகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்.
மதுரையில் 100 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்க ரூ.1653 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. தற்போது வீடுகள் தோறும் குழாய் இணைப்பு பதிக்கும் பணிகள் நிறைவுறவுள்ளன.
இந்நிலையில் மேல்நிலை தொட்டியில் நீரேற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த மேயர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் செட்டிகுளம் வாய்க்கால் துார்வாரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
இதில் மண்டலத் தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, உதவி கமிஷனர்கள் ராதா, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.