/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொடிக்கம்பங்கள் அகற்றும் பிரச்னை உயர்நீதிமன்றத்தில் ம.தி.மு.க., மனு
/
கொடிக்கம்பங்கள் அகற்றும் பிரச்னை உயர்நீதிமன்றத்தில் ம.தி.மு.க., மனு
கொடிக்கம்பங்கள் அகற்றும் பிரச்னை உயர்நீதிமன்றத்தில் ம.தி.மு.க., மனு
கொடிக்கம்பங்கள் அகற்றும் பிரச்னை உயர்நீதிமன்றத்தில் ம.தி.மு.க., மனு
ADDED : ஆக 05, 2025 04:50 AM
மதுரை : கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில் ம.தி.மு.க., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப்பில் அ.தி.மு.க., கொடிக் கம்பம் நட அனுமதிக்கும்படி உத்தரவிட அதன் நிர்வாகி கதிரவன் மனு தாக்கல் செய்தார்.
ஜன.,27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், அரசின் பிற துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
'மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,' என அதன் மாநில செயலாளர் சண்முகம் மனு செய்தார்.
ஜூன் 20 ல் நீதிபதி சி.சரவணன் மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்தார்.ஜூலை 22ல் 3 நீதிபதிகள் அமர்வு, 'விருப்பமுள்ள கட்சிகள் விளக்கமளிக்கும் வகையில் இவ்வழக்கில் இணைத்துக் கொள்ள இடையீட்டு மனுக்களை ஆக.,5க்குள் தாக்கல் செய்ய வேண்டும். கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்' என உத்தரவிட்டு ஆக.,6 க்கு ஒத்திவைத்தனர்.ம.தி.மு.க.,பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு: சட்டப்படி அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொடிக் கம்பங்களை நிறுவுகிறோம். கொடிக் கம்பங்களை நிறுவ கட்சிகளுக்கு அடிப்படை உரிமை உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களை வழக்கில் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.