தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நடவடிக்கை


UPDATED : நவ 15, 2026 12:15 AM

ADDED : நவ 15, 2026 12:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:15 AM ADDED : நவ 15, 2026 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, பதுக்கலை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அரிசி, நெல், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, சர்க்கரைக்கு கையிருப்பு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, அரிசி, நெல்லுக்கு 2027 ஜன.,31 வரை வரம்புகள் நடைமுறையில் இருக்கும். எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக்கூடாது.

மத்திய அரசு நவ.,6 ல் பிறப்பித்த உத்தரவின்படி மொத்த, சில்லரை வணிகர்கள், பெரிய தொடர் சில்லரை விற்பனை நிறுவனம், ஆலை உரிமையாளர், பதனிடுவோர் அரிசி /நெல் இருப்பை இணையதளத்தில் (foodstock.dfpd.gov.in) பதிவிட வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதை புதுப்பிக்க வேண்டும்.

துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு இருப்பை இணையதளத்தில் (fcainfoweb.nic.in) அறிவிக்க வேண்டும். அதே முறையில் சர்க்கரை இருப்பையும் அறிவிக்க வேண்டும்.

சர்க்கரை இருப்பை வாங்கிய தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, கண்காணிக்க, மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சொந்த வேளாண் விளைபொருட்களை இருப்பு வைத்தல் அல்லது விற்பனை செய்தலுக்கு இந்த உத்தரவு பாதிப்பை ஏற்படுத்தாது.புகார்களை கட்டணமில்லா உதவி எண் 1967 / 1800 425 5901 அல்லது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us