ADDED : ஜன 12, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் திருமங்கலம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் சின்னவெள்ளைச்சாமி, செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூர்யா கலா, வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு பயிற்றுநர் பாலமுருகன் நன்றி கூறினார். முகாமில் 90 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.