ADDED : ஆக 08, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கோவில்பட்டி வெள்ளதுரை 55. கேரள மாநிலம் ஒட்டப்பாலத்தில் இருந்து மதுரைக்கு திருவனந்தபுரம் - மதுரை 'அமிர்தா' ரயிலில் (16343) பொதுப் பெட்டியில் பயணித்தார். நேற்று காலை 9:50 மணிக்கு ரயில் மதுரை வந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.
நடைமேடையில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் முரளிதாஸ், அனு எலிசபெத் ஜோசப் ஆகியோர் முதலுதவி அளித்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.