ADDED : அக் 24, 2024 05:29 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மதுரை பயோ டெக்னிக் லேபரட்டரி சார்பில் தைராய்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமில் கல்லுாரி தாளாளர் எம்.எஸ்.ஷா, தலைமை வகித்தார். பொருளாளர் சகிலா முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனியாண்டி வரவேற்றார். துணை முதல்வர் சரவணன் முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்த் துறை பேராசிரியர்கள் ராமுத்தாய், பழனியம்மாள், ஆறுமுக ஜோதி, இன்பமேரி, மயில் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
