நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி அரைஸ் விரிவாக்கத்துறை, உன்னத் பாரத் அபியான், கணிதவியல் துறை மற்றும் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் பூசாரிபட்டியில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் வரவேற்றார். முதல்வர் அன்பரசு, ஆலோசகர் லாசர், டாக்டர் ரமேஷ், கருமாத்துார் ஊராட்சித் தலைவர் பாண்டீஸ்வரி, பூசாரிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் ராமர் துவக்கி வைத்தனர். கணிதவியல் துறை பேராசிரியர் ஜினோ காட்வின் நன்றி கூறினார்.