நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ரெட் ரிப்பன் கிளப், பெண்கள் ஆளுமை மையம் சார்பில் மாணவியருக்கான சிறப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் வலையன்குளம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன் தலைமை வகித்தார். மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றிற்கான தீர்வுகள், பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், உணவு முறைகள் குறித்து டாக்டர்கள் சுந்தரபிரியா, ராமலட்சுமி, செவிலியர் ராஜீ பேசினார். பேராசிரியர் டீனா, ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் வீரம்மாள் ஒருங்கிணைத்தனர்.