நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையம் சார்பில் உலக ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம் தினம் 'நியூரோடைவசர் சிட்டி'எனும் தலைப்பில் நடந்தது. 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள், கண், பல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஆட்டிசம் சிகிச்சை முறைகள், பேச்சு பயிற்சி, குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும் பெற்றோர்களிடம் டாக்டர்கள் விளக்கினர். விருந்தினராக டாக்டர் மேரிலலிதா பங்கேற்று குழு விவாதம் நடத்தினார்.
மருத்துவ இயக்குநர் ரமேஷ் அர்த்தனாரி, டாக்டர்கள் ஏ. கண்ணன், பி.கண்ணன், உமா, நாகராஜன், அருண் பிரியா, செந்தில் குமார், பாண்டியராஜன் பங்கேற்றனர்.