நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் -: திருமங்கலத்தில் மக்களுடன் ஓமியோபதி அமைப்பு , ஓமியோபதி மருத்துவர்கள் மாணவர்கள் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். ரோட்டரி கிளப் தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வந்திருந்த பொதுமக்களுக்கு காய்ச்சல், ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வயிற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஓமியோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் ரம்யா, கிருத்திகா, ரோஹித், சிந்துஜா, தமிழரசன் கலந்து கொண்டனர்.