நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தாய் பள்ளியில் அரசின் நலம் காக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் பிரவீன்குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வராஜ், துணை இயக்குநர் குமரகுருபரன் கலந்து கொண்டனர்.வண்டியூர், ஆண்டார்கொட்டாரம் பகுதியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை அமைச்சர் தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார்.