
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தினமலர் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு நேஷனல் இன்சூரன்ஸ் லிட்., சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது.
தினமலர் பொதுமேலாளர் ஆர்.பாலமுருகன் தலைமை வகித்தார். இன்சூரன்ஸ் மண்டல மேலாளர் மீனாட்சி துவக்கி வைத்தார். முதுநிலை வணிக மேலாளர் சரவணகுமார், ஓய்வுபெற்ற வளர்ச்சி அதிகாரி சீனிவாசன், குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு(எப்.எச்.பி.எல்.,) திட்ட மேலாளர் மூர்த்தி பங்கேற்றனர். முகாமில் மீனாட்சி மிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தி ஐ பவுண்டேஷன், மெகா லேப், நீல்ஸ் பல் மருத்துவ கிளினிக் பங்கேற்றன.

