நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், இணை இயக்குனர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாதபிரபு முகாமை துவக்கி வைத்தனர்.
1600 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது.
கர்ப்பிணிகள், காச நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. அகஸ்தியர் பிறந்த நாளான நேற்று தமிழக அரசினால் சித்தர் தியானம் அனுசரிக்கப்பட்டது.

