ADDED : செப் 04, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி, சமுதாய அறிவியல் கல்லுாரிகளின் என்.எஸ்.எஸ்., பிரிவு சார்பில் அரும்பனுார் புதுார் கிராமத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவக் குழு சார்பில் கிராமத்தினருக்கு சர்க்கரை நோய், கண் பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டன. திட்ட அலுவலர்கள் சித்ரா, ஆரோக்கிய மேரி, வேணுதேவன் ஏற்பாடு செய்தனர்.
