ADDED : செப் 04, 2026 05:52 PM
மதுரை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியம் சார்பில் பொதுமக்கள், கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
சமூகநீதி, சமத்துவம் என்ற தலைப்பில் புதுக்கவிதை, மரபுக்கவிதை எழுதலாம், பக்க அளவு இல்லை. இன்றைய சுற்றுச்சூழல் சவால்களுக்கு காந்திய அணுகுமுறை என்ற தலைப்பில் பொதுமக்கள் கட்டுரை எழுதலாம், பக்க அளவு நிர்ணயம் இல்லை. கவிதை, கட்டுரைகளை செப். 21க்குள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர், காந்தி மியூசியம், மதுரை.
இன்றைய ஜென்ஸி தலைமுறையினர் பார்வையில் காந்திய சிந்தனை என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கு செப். 22 காலை 11:00 முதல் மதியம் ஒரு மணி வரை மியூசிய வளாகத்தில் கட்டுரைப் போட்டி நடத்தப்படும். பக்க அளவுகள் இல்லை. பதிவுக் கட்டணம் இல்லை. பரிசுக்குரிய கவிதை, கட்டுரைப் போட்டியாளர்களுக்கு அக். 2 காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு: 80100 94881.
