ADDED : செப் 04, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை அருகே மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா நிறுவனர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி முதல்வர் செல்வகுமாரி வரவேற்றார். நிர்வாகிகள் சுப்பிரமணி, பெருமாள், சென்னக்கிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ், நிர்வாக அலுவலர் சந்திரன் பங்கேற்றனர். கல்வியியல் கல்லுாரி, மகளிர் கல்லுாரி, பாலிடெக்னிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
