ADDED : அக் 25, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: கச்சைகட்டி பெருமாள் கோயில் முன்பு வாடிப்பட்டி ஜவுளிபூங்கா ஜே.வி.எஸ்., எக்ஸ்போர்ட்ஸ், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தொழிற்சாலை மேலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அஸ்வினி தலைமையில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் முத்தமிழ்குமரன், செவிலியர் பிரீத்திஸ்வரி, உதவியாளர் பிரேம்குமார் குழு சிகிச்சையளித்தது. ரத்த சர்க்கரை, அழுத்த பரிசோதனைகள், பொது மருத்துவ ஆலோசனையுடன், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மனிதவள அலுவலர் சிவானந்தம் ஏற்பாடு செய்தார்.
