/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அப்போலோ மருத்துவமனை சார்பில் மெடிக்கல் அப்டேட் 2024 கருத்தரங்கு
/
அப்போலோ மருத்துவமனை சார்பில் மெடிக்கல் அப்டேட் 2024 கருத்தரங்கு
அப்போலோ மருத்துவமனை சார்பில் மெடிக்கல் அப்டேட் 2024 கருத்தரங்கு
அப்போலோ மருத்துவமனை சார்பில் மெடிக்கல் அப்டேட் 2024 கருத்தரங்கு
ADDED : செப் 22, 2024 03:47 AM

மதுரை : மதுரை அப்போலோ மருத்துவமனை சார்பில் மெடிக்கல் அப்டேட் 2024 கருத்தரங்கு நடந்தது.
திட்ட இயக்குனர் டாக்டர் பழனியப்பன் பேசியதாவது: மருத்துவத்துறை என்பது ஆச்சரியங்கள் நிறைந்ததாக உள்ளது. தற்போது வரும் நோயாளிகள் நுரையீரல் பிரச்னை, இதயம் உட்பட ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்னைகளுடன் வருகின்றனர்.
எனவே டாக்டர்கள் பிற மருத்துவத் துறைகள் சார்ந்த கூடுதல் அறிவை பெறுவது அவசியம். இது குறித்து டாக்டர் களுக்கு விளக்குவதற்காக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
திருச்சி ராமகிருஷ்ணா மருத்துவமனை முதுநிலை இதய நோய் நிபுணர் சென்னியப்பன் பேசியதாவது:
நெஞ்சு வலி என்பது மாரடைப்பின் முக்கிய அறிகுறி. இதயத்திலிருந்து நெஞ்சுவலி எப்படி வருகிறது, அதை எப்படி மாரடைப்பு என்பது என்று தெரிந்து கொள்வது முக்கியம். நோயாளி நெஞ்சு வலியுடன் வரும்போது அது எந்த வகையானது என்பதை டாக்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நோயாளி அந்த குறிப்பிட்ட வலியுடன் வரும்போதும், இது உண்மையான நெஞ்சு வலி தானா என்பதை எல்லா டாக்டர்களாலும் கண்டு கொள்ள முடியும். நோயாளியை பிற மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு முன்பாக, என்னென்ன வகையான மாத்திரைகளை முதலிலேயே கொடுக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
டாக்டர்கள் குமரன், கருப்பையா, சுப்பு ராமகிருஷ்ணா, சண்முகவேலு, ஜோசப் ராஜன், திருப்பதி, ஆசீர்வாதம், விவேக் சி போஸ், அருண் பிரசாத், ஸ்ரீதர், மணிகண்டன் ஆகியோர் பேசினர்.
அப்போலோ மருத்துவமனை சி.ஓ.ஓ. நீலக்கண்ணன் கருத்தரங்க நோக்கத்தை விளக்கினார். டாக்டர் பால் சுதாகர் நன்றி கூறினார்.