ADDED : ஜூன் 30, 2025 03:02 AM
மதுரை-அலங்காநல்லூர் மெயின் ரோடு சிக்கந்தர்சாவடியில் விக்டர் மருத்துவமனை அமைந்துள்ளது.அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் இங்கு, 50 சதவீதத்துக்கு மேல் தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கின்றன.
மருத்துவமனை டாக்டர் ஜெயஸ்ரீ கூறியதாவது: இங்கு அனைத்து மருந்துகளும் 50 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும். இங்கு 24 மணி நேர மருத்துவ சேவை உண்டு. இருபதுக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்க அறைகள், லிப்ட்,ஆப்பரேஷன் தியேட்டர் வசதி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., எக்ஸ்ரே, அவசர சிகிச்சை வசதி,உள்நோயாளிகள் பிரிவு. ஆம்புலன்ஸ் வசதிகள் உண்டு. மகப்பேறு குழந்தைகள் மருத்துவம் இம் மருத்துவமனையின்சிறப்பு. அலங்காநல்லூர் வட்டார கிராமங்களுக்கு, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்திடும் மருத்துவமனை இது, என்றார்.
- டாக்டர் ஜெயஸ்ரீ, மதுரை
98430 1773