/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு
/
இன்று மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு
ADDED : ஜூலை 14, 2025 02:55 AM
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை, இன்று (ஜூலை 14) முழுவதும் அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எழுந்தருள்வதற்காக, நேற்று இரவு 10:00 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அதிகாலை திருப்பரங்குன்றத்தில் சேர்த்தியாகினர். இதற்காக நேற்று மாலை 6:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் சாத்தப்பட்ட நடை, இன்று முழுவதும் அடைக்கப்படுகிறது.
'நாளை (ஜூலை 15) அதிகாலை வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் வசதிக்காக, இன்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கலைக்கூடம், அன்னதானம் வழக்கம்போல் செயல்படும். ஆடி வீதி வன்னிமரத்தடி விநாயகர் சன்னதியில் பதிவுத் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படும். ஆடி வீதிகளில் பக்தர்கள் வழங்கம்போல் அனுமதிக்கப்படுவர்' என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.