/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளக்கு வசதியின்றி விஷ ஜந்துகள் நடமாட்டம் பரவை மீனாட்சி மில் காலனி பரிதாபம்
/
விளக்கு வசதியின்றி விஷ ஜந்துகள் நடமாட்டம் பரவை மீனாட்சி மில் காலனி பரிதாபம்
விளக்கு வசதியின்றி விஷ ஜந்துகள் நடமாட்டம் பரவை மீனாட்சி மில் காலனி பரிதாபம்
விளக்கு வசதியின்றி விஷ ஜந்துகள் நடமாட்டம் பரவை மீனாட்சி மில் காலனி பரிதாபம்
ADDED : ஜூலை 31, 2025 03:09 AM

வாடிப்பட்டி : பரவை மீனாட்சி மில் காலனி விரிவாக்க பகுதிகளில் ரோடு, மின்விளக்கு, வடிகால் வசதியில்லாததால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது அப்பகுதியினரை அச்சமடையச் செய்துள்ளது.
பேரூராட்சி 13 வது வார்டு பரவை மில் காலனியில் 1950ல் கட்டப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட மில் ஊழியர் வீடுகள் உள்ளன. நான்கு வீடுகளுக்கு ஒரு இணைப்பு வீதம் பாதாள சாக்கடை வசதியும் இருக்கும் வகையில் 1950களிலேயே வடிவமைத்துள்ளனர். இன்று வரை பயன்பாட்டிலும் உள்ளது.
இந்தப் பாதாள சாக்கடை 'செப்டிக் டேங்க்' சிலாப்புகள் உடைந்து அபாய நிலையில் உள்ளன. இதனால் குழந்தைகள், விலங்குகள் 'செப்டிக் டேங்க்'கிற்குள் விழும் அபாயம் உள்ளது.
இங்குள்ள 7 தெருக்கள், புதிதாக வீடு கட்டி வசிப்போரிடம் வரி வசூல் செய்கின்றனர். குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை, வடிகால், மின்விளக்கு வசதிகள் இல்லை. கண்மாய் மற்றும் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதி என்பதால் பாம்பு, கீரி உள்பட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக அச்சப்படுகின்றனர்.
அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மோகன், கண்ணையா, கல்பனா கூறியதாவது:
பத்தாண்டுகளாக ரோடு வசதி கேட்டும் எந்த பயனும் இல்லை. 'உங்களுடன் முதல்வர் ஸ்டாலின்' முகாம் வரை மனு அளித்துள்ளோம். ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று தி.மு.க., கவுன்சிலர் தீர்மானத்தை காட்டி சமாளிக்கிறார். இப்பகுதியினர் சொந்த செலவில் ஜல்லி, மண், கொட்டி சாலை அமைத்துள்ளோம். மழை நேரங்களில் அவை சேறும் சகதியுமாகிவிடுகிறது. தெருவில் மின் விளக்கு கம்பங்கள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகம் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்றனர்.
வார்டு கவுன்சிலர் நாகேஸ்வரி கூறுகையில், ''பழைய குடியிருப்புகளில் இருந்த பாதாள சாக்கடை மராமத்து பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. மின்வாரியத்தில் 5 தெருக்களுக்கு பணம் செலுத்தி 4ல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் விரைவில் அமைக்கப்படும். சாலை வசதியும் செய்து தரப்படும்'' என்றார்.