ADDED : அக் 16, 2024 05:07 AM

மேலுார், : மேலுாரில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் நகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.
தெற்குத்தெரு, நாயத்தான்பட்டி பகுதிகளில் வன்னி, கலைமணி ஆகியோரின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரும், பட்டூரில் சுப்பம்மாள் வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. மேலுார் எஸ்.எஸ்.வி., சாலா ரோட்டில் உள்ள பார்த்தசாரதி என்பவர் வீட்டினுள் தண்ணீர் புகுந்தது. நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டு.
நகராட்சி 8 வது வார்டு ஸ்டார் நகரில் பெய்த மழை நீர் அருகே வீரசூடாமணி கண்மாயில் கலப்பது வழக்கம். தற்போது கண்மாய்க்கு செல்ல வழியில்லாததால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீட்டை சுற்றிலும் தேங்கி நிற்பதால் விஷப் பூச்சிகளின் படையெடுப்பால் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் மழை நீரை வீரசூடாமணி கண்மாய்க்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.