/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மேலுார் விவசாயிகள்
/
தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மேலுார் விவசாயிகள்
தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மேலுார் விவசாயிகள்
தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மேலுார் விவசாயிகள்
ADDED : ஜன 02, 2026 06:18 AM

மேலுார்: கீழவளவு பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கீழையூர் பிரதான கால்வாயில் இருந்து 8 முதல் 12 வரை உள்ள கால்வாய்களில் வரும் தண்ணீரால் கீழவளவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறும். இப்பகுதியில் நெல் பயிரிட்டு நுாறு நாட்களான நிலையில் தற்போது பரிச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக தண்ணீர் நிறுத்தி இருந்த நீர்வளத் துறையினர் நேற்றுமுன்தினம் தண்ணீர் திறந்ததும் நிறுத்திவிட்டனர்.
விவசாயி சிவா: சொசைட்டியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்த நிலையில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பயிர்கள் பதறாகும் அவலம் நிலவுகிறது. வயலில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன. தண்ணீர் தேவை குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்றார்.

