/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேங்குது கழிவுநீர்: 'நாறுது' மார்நாடு
/
தேங்குது கழிவுநீர்: 'நாறுது' மார்நாடு
ADDED : ஜன 02, 2026 06:18 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் கிராமம் மார்நாடு தெருக்களில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்குவதால் சுகாதாரம் பாதிக்கிறது.
இங்குள்ள மார்நாடு நகர் 1, 2வது தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற 2024ல் சிமென்ட் சாலையுடன் வடிகால் கட்டப்பட்டது. ஆனால் மெயின் வீதியில் உள்ள வடிகால் சற்று மேடாக உள் ளதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் 2வது தெருவில் தேங்குகிறது.
அதேபோல் 1வது தெருவில் சிலர் மண்ணைக் கொட்டி வடிகாலை அடைத்துள்ளனர். செப்டிக் டேங்க் கழிவுகள் நிரம்பி வடிகாலில் கலக்கிறது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. துர்நாற்றம் வீசி நோய் தொற்று அபாயம் உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கின்றனர்.
மழைநேரங்களில் மெயின் வடிகாலில் வெளியேறும் கழிவுநீர் சாலையை கடந்து உறிஞ்சி குழிக்குள் செல்ல முடியாமல் வடிகாலில் தேங்கி நிற்கிறது. அடுத்தடுத்து வீடுகள் அதிகரிக்கும் இப்பகுதியில், கழிவுநீர் தேங்காமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

