ADDED : ஜன 02, 2026 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி பேச்சி கூறியதாவது: பெருமாள் கோயில் தெருவில் பலநுாறுபேர் வசிக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை அருகே போர்வெல்லுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பொது சுகாதாரம், மக்கள், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு இத்தொட்டி தண்ணீரை பயன்படுத்தினோம்.
பல மாதங்களுக்கு முன்பு மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனை சீரமைக்காமல் விட்டதால் தொட்டி பயன்பாடின்றி பல இடங்களில் ஓட்டை விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் தண்ணீரின்றி தவிக்கிறோம். ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தொட்டியை சீரமைக்க வேண்டும் என்றார்.

