/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பின் பிடியில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்ட்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்ட்
ஆக்கிரமிப்பின் பிடியில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்ட்
ஆக்கிரமிப்பின் பிடியில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஜன 02, 2026 06:19 AM

சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் அடிப்படை வசதிகள் இன்றியும் ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கியுள்ள பஸ் ஸ்டாண்டை சீரமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
பல்வேறு ஊர்களின் போக்குவரத்து இணைப்பு மையமாக இந்த பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு நிழற்குடை, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றியும், தனியார் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் நிறைந்துள்ளன.
மூக்கன்: இங்கு பல ஆண்டுகளாக பெயரளவில் தான் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. நிற்பதற்கு நிழற்குடை இல்லை, உட்கார சேர்கள் இல்லை. இதனால் வெயிலிலும், மழையிலும் பள்ளி மாணவர்கள் உட்பட பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
சுற்றிலும் கடைகளின் ஆக்கிரமிப்பால் பஸ்ஸ்டாண்ட் சுருங்கிவிட்டது. பஸ்கள் நின்றால் பயணிகள் நிற்கக்கூட இடமில்லாத நிலை உள்ளது.
இதனால் கடை வாசலிலும், தரையிலும் அமரும் அவலம் ஏற்படுகிறது. ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து பஸ் ஸ்டாண்டை சீரமைக்க வேண்டும் என்றார்.

