ADDED : ஆக 18, 2026 03:48 AM
மதுரை: மதுரையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான விஷால் குழுமமும், தென்னிந்தியாவின் முன்னணி சீனியர் லிவிங் அபார்ட்மென்ட் நிறுவனமான வேதாந்தா சீனியர் லிவிங்கும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதற்கான திட்டம் விஷால் ஸ்வர்ணபூமி டவுன்ஷிப், அலங்காநல்லூர் பகுதியில் 196 சீனியர் லிவிங் அபார்ட்மென்ட் கொண்ட திட்டமாக இது அமைய உள்ளது. 2030 க்குள் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
விஷால் குழுமத்தின் மதுரை நகர வளர்ச்சி மற்றும் உள்ளூர் சந்தை குறித்த அனுபவத்துடன், வேதாந்தா சீனியர் லிவிங்கின் தொழில்முறை நிர்வாக அனுபவம் இணைந்து இந்த சீனியர்களுக்கான பாதுகாப்பு, மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை உருவாக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மதுரையில் முதுமைக்கு ஒரு புதிய வாழ்க்கை முறை உருவாக்கப்படும் என விஷால் குழுமம் அண்ட் வேதாந்தா சீனியர் லிவிங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
