UPDATED : அக் 30, 2026 07:42 PM
ADDED : அக் 30, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் கல்லுாரி ஐந்து ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
முதல்வர் வாசுகி, மியூசிய செயலாளர் நந்தாராவ், ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சைவ சித்தாந்த துறைத் தலைவர் மலர்விழி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் பழனியாண்டவர் கல்லுாரி மாணவிகளுக்கு காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்பு நடத்துவதுடன் கருத்தரங்கு, சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கு வழிகாட்டப்படும். கல்வி அலுவலர் நடராஜன், தமிழ்த்துறை, ஆங்கிலத் துறை தலைவர்கள் பூங்கொடி, நவீனா ராணி கலந்து கொண்டனர்.
