/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திண்டுக்கல் - கோவை இடையே இன்று 'மெமு' சிறப்பு ரயில்
/
திண்டுக்கல் - கோவை இடையே இன்று 'மெமு' சிறப்பு ரயில்
திண்டுக்கல் - கோவை இடையே இன்று 'மெமு' சிறப்பு ரயில்
திண்டுக்கல் - கோவை இடையே இன்று 'மெமு' சிறப்பு ரயில்
ADDED : அக் 17, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் - கோவை இடையே பொள்ளாச்சி வழியாக 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா 'மெமு' சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அக்.,17 (இன்று), 18, 21, 22 காலை 9:35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06139), மதியம் 1:10 மணிக்கு திண்டுக்கல் செல்லும். மறுமார்க்கத்தில் மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06140), மாலை 5:50 மணிக்கு கோவை செல்லும்.
ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக் கடவு, போத்தனுார் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.