ADDED : ஆக 31, 2025 04:57 AM
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர் தடகளப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
14 வயது பிரிவு போட்டி முடிவுகள்:
100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் செயின்ட் ஜான் பள்ளி ஸ்ரீவர்ஷன், 400 மீட்டர், 600 மீட்டர் ஓட்டத்தில் சைதை துரைசாமி பள்ளி திலீப் முதலிடம் பெற்றனர்.
80 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் ஆல்வின் பள்ளி லலித் கிஷோர், நீளம் தாண்டுதலில் செயின்ட் ஜான் பள்ளி ஜனா, உயரம் தாண்டுதலில் செயின்ட் பிரிட்டோ பள்ளி ராகுல்ராஜ், வட்டு எறிதல், குண்டு எறிதலில் பி.அம்மாபட்டி அரசுப் பள்ளி சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றனர். 4
* 100 மீட்டர் ரிலேயில் கே.புளியங்குளம் கேரன் பள்ளி முதலிடம் பெற்றது.
17 வயது பிரிவு முடிவுகள்:
100 மீட்டர் ஓட்டத்தில் கே.பெருமாள்பட்டி அரசுப்பள்ளி ஆதிகேசவன், 200 மீட்டர், 400, 800 மீட்டர் ஓட்டத்தில் செயின்ட் ஜான் பள்ளி பவேஷ், 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டத்தில் மேலப்பட்டி எம்.கே.வி. சாலா பள்ளி கோடீஸ்வரன் முதலிடம் பெற்றனர். 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சேவியர் பள்ளி கோகுலன், நீளம் தாண்டுதலில் டி.வி.எஸ். பள்ளி ரித்திக், உயரம் தாண்டுதலில் எம்.என்.யு.ஜெ., பள்ளி பிரதீப், மும்முறை தாண்டுதலில் செயின்ட் ஜான் பள்ளி சந்தோஷ், போல்வால்ட்டில் எழுமலை அரசுப் பள்ளி வாசுகண்ணன், குண்டு எறிதலில் சுப்ரமணிய பாரதி பள்ளி பிரவீண்குமார், வட்டு எறிதலில் எழுமலை அரசுப் பள்ளி பிரவீண்குமார், ஈட்டி எறிதலில் மதுரைக்கல்லுாரி பள்ளி கபில் ஆகியோர் முதலிடம் பெற்றனர். 4 *100 மீட்டர் ரிலேயில் சி.இ.ஓ.ஏ., பள்ளி, 4 * 400 மீட்டர் ரிலேயில் கே.பெருமாள்பட்டி அரசுப் பள்ளி முதலிடம் பெற்றன.
19 வயது பிரிவு:
100 மீட்டர் ஓட்டம், நீளம்
தாண்டுதலில் நேரு வித்யாசாலா பள்ளி சுல்தான் அலாவுதீன், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்தில் லீ சாட்லியர் பள்ளி தங்க முகேஷ், 800 மீட்டர், 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டத்தில் சோழவந்தான் ஏ.எஸ். ஜி.எச்.எஸ்., பள்ளி மதன்
முதலிடம் பெற்றனர்.
110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அண்ணாமலையார் பள்ளி சீமான் விக்ரம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதலில் ஒய்.எம்.சி.ஏ., பள்ளி சரண், உயரம் தாண்டுதலில் சி.எஸ்.ஆர். பள்ளி கர்ணா சங்கர், போல்வால்ட்டில் ஏ.பி.டி.டி., பள்ளி அக்ஷயா பிரியன், குண்டு எறிதலில் லார்டு வி.எம்.எச்.எஸ். பள்ளி
தரணிதரன், வட்டு எறிதலில் சி.இ.ஓ.ஏ., பள்ளி திருமலைநம்பி, ஈட்டி எறிதலில் மகாத்மா மாண்டிசோரி பள்ளி பாலகிருஷ்ணன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். 4
* 100 மீட்டர் ரிலேயில் சி.இ.ஓ.ஏ., பள்ளி, 4 * 400 மீட்டர் ரிலேயில் தாய் மெட்ரிக் பள்ளி
முதலிடம் பெற்றன.