ADDED : அக் 11, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் உலக மன ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு மன ஆரோக்கியம், தியானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
லயன்ஸ் கிளப் மதுரை ஹோஸ்ட் சார்பில் ஈஷா யோகா மைய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். கல்லுாரி முதல்வர் ஆனந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சகாதேவன் மனவலிமை பற்றி பேசினார்.
லயன்ஸ் கிளப் தலைவர் கிரிதரன், செயலாளர் வெங்கடேஷ் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவக்குமார், உடற்கல்வித்துறை இயக்குநர் சகாதேவன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.