ADDED : அக் 11, 2025 04:28 AM
மதுரை:' தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டிகள் தியாகராஜர், சோலைமலை பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரியில் நடந்தன. மொத்தம் 38 மாவட்ட மகளிர் அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் சென்னை, செங்கல்பட்டு அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 48 ரன் எடுத்தது.
அடுத்து ஆடிய செங்கல்பட்டு அணி 7.4 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி முதல்வர் கோப்பையை வென்றது.
மூன்றாமிடத்திற்கான போட்டியில் கன்னியாகுமரி, ஈரோடு அணிகள் மோதின. முதலில் ஆடிய கன்னியாகுமரி அணி 8 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன் எடுத்தது.
அடுத்து ஆடிய ஈரோடு அணி 5.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி 3ம் இடம் பெற்றது. ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் அக்.14ல் நிறைவடைகிறது.