/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மனநல ஆலோசனை
/
6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மனநல ஆலோசனை
ADDED : ஆக 10, 2025 03:31 AM
மதுரை: மதுரையில் எச்.சி.எல்., பவுண்டேஷன், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனம் சார்பில் மனநல ஆலோசனை வழங்க 2020 அக். 10ல் உலக மனநல தினத்தை முன்னிட்டு 'ஸ்பீக் டு அஸ்' எனும் மனநலஉதவி மையம் துவங்கப்பட்டது.
மன அழுத்தம், கவலை, தனிமை, படிப்பில் சிரமம், குடிப்பழக்கம், தற்கொலை எண்ணம் உள்ளிட்டவைகளில் இருந்து விடுபட, தினமும் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை 93754 93754ல் ஆலோசனை வழங்கப்படும். பயிற்சி பெற்ற 63 தன்னார்வலர்கள் ஆலோசனைவழங்கி வருகின்றனர்.
தற்போது புதிதாக தேர்வான 29 தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது: சமூகத்தில் மனநலத்திற்கான தேவைகள் அதிகம் இருப்பினும் ஆலோசகர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அத்தகைய தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களை உருவாக்குகிறோம். அவர்கள் மூலம் மனநல ஆலோசனை தேவைப்படுவோருக்கு அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 5 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன என்றார்.
மனநல ஆலோசகர்கள் ராஜாராம் சுப்பையன், குருபாரதி, திட்ட இயக்குநர் செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர்.