ADDED : மார் 12, 2024 06:36 AM
அ நிறம் | அளவு
வேலுார் : வேலுார் அடுத்த நஞ்சுகொண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி சண்முகம், 51.
இவரது மகள் கீழ்அரசம்பட்டில் கணவருடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மாலை கீழ் அரசம்பட்டில் நடந்த காளை விடும் விழாவை காண, மேஸ்திரி சண்முகம் சென்றார். அப்போது சீறிப்பாய்ந்த ஒரு காளை, அவரது மார்பின் மீது மோதியதில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
