/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெற்பயிரில் துங்ரோ வைரஸ் கட்டுப்படுத்த வழிமுறைகள்
/
நெற்பயிரில் துங்ரோ வைரஸ் கட்டுப்படுத்த வழிமுறைகள்
ADDED : டிச 15, 2024 05:28 AM
கள்ளிக்குடி: நெற்பயிரை பாதிக்கும் துங்ரோ வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கள்ளிக்குடி வேளாண் உதவி இயக்குனர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: கள்ளிக்குடி பகுதிகளில் தற்போது இரண்டாம் பருவ நெற்பயிற் சாகுபடி நடக்கிறது. நெற்பயிரை தாக்கும் 'துங்ரோ வைரஸ்' என்பது சேதம் ஏற்படுத்தும் நோய்.இதனால் பாதித்த பயிர்கள் வளர்ச்சி குன்றிவிடும். இதைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறை அவசியம்.
ஒரு ஏக்கர் நாற்றங்காலுக்கு 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும். அறுவடைக்குப் பின் நிலத்தை நன்றாக உழ வேண்டும். அதிக துார் கட்டும் பருவத்தில் காப்பர் சல்பேட் ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில், ஒரு கிலோ மணலில் கலந்து நெல் வயலில் துாவி விட வேண்டும்.
பச்சை தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் மருந்தை 0.5 மி.லி.,யை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்தை ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீர் கரைத்து தெளிக்க வேண்டும் என தெரிவித்தார்.