/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு அமைச்சர் தகவல்
/
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு அமைச்சர் தகவல்
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு அமைச்சர் தகவல்
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு அமைச்சர் தகவல்
ADDED : ஜன 07, 2024 06:46 AM
மதுரை; ''மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது,'' என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க 99 வது ஆண்டு நிறைவு விழா மதுரையில் நடந்தது. தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.
அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
ரயில், விமான சேவை என எந்தத்துறையாக இருந்தாலும் எந்த அரசு வந்தாலும் அணுகி மதுரையின் வளர்ச்சிக்கு தொழில் வர்த்தக சங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது.
தொழில்துறையில் தமிழகம் 14வது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. முதலிடத்திற்கு கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். போட்டி நிறைந்த உலகில் தொழில் செய்வது சிரமம்தான். வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்றார்.
பட்டிமன்ற பேச்சாளர்ராஜா: வெறும் 24 பேருடன் துவங்கிய இச்சங்கத்தில் தற்போது 5000 பேர் உள்ளனர். தென் தமிழக வளர்ச்சிக்கு இச்சங்கம் பாடுபடுகிறது. மாணவர்கள் தொழில் முனைவோராக மாறினால் இந்தியா வளரும். இலக்குடன் பயணிக்க வேண்டும்.வாழும் காலத்தில் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றார்.
சங்க செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர்கள் செல்வம், ஜீயர்பாபு, இளங்கோவன், இணைச் செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.