/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மெட்ரோ ரயில் வழித்தடம் மாற்றமா திட்ட இயக்குநர், 'நகாய்' அதிகாரிகள் ஆய்வு
/
மெட்ரோ ரயில் வழித்தடம் மாற்றமா திட்ட இயக்குநர், 'நகாய்' அதிகாரிகள் ஆய்வு
மெட்ரோ ரயில் வழித்தடம் மாற்றமா திட்ட இயக்குநர், 'நகாய்' அதிகாரிகள் ஆய்வு
மெட்ரோ ரயில் வழித்தடம் மாற்றமா திட்ட இயக்குநர், 'நகாய்' அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 07, 2025 10:52 AM
மதுரை: மதுரை திருமங்கலம் பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான வழித்தடங்களை மாற்றம் செய்வது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய (நகாய்) அதிகாரிகளுடன் இணைந்து, மெட்ரோ ரயில்வே திட்ட இயக்குநர் அர்ச்சுனன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தகடை வரையான 32 கி.மீ. துாரத்திற்கு 26 ஸ்டாப்களுடன் (நிலையம்) மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேற்பார்வையில் தி ட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான வழித்தடம், திருமங்கலம் அணுகுசாலையில் தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் அமைக்க முதலில் திட்டமிட்டது. சமீபத்தில் சிப்காட் மற்றும் தோப்பூர் சந்திப்புகளில் வாகனங்கள் செல்வதற்கான இரண்டு சுரங்கப்பாதைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்மொழிந்துள்ளது.
திருமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் சுரங்கப்பாதை பணிகள் காரணமாக, ரயில் தூண்கள் மற்றும் ஸ்டாப்களை மாற்றுவது, மெட்ரோ வழித்தடத்தை மாற்றுவது போன்ற சாத்தியக்கூறுகள் குறித்து திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் மணிபாரதி இணைந்து அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அர்ச்சுனன் கூறுகையில், ''இந்த ஆய்வின்போது மெட்ரோ ரயில் துாண்கள் மற்றும் ஸ்டாப்களை உயர்த்துவது அல்லது மெட்ரோ வழித்தடத்தை மாற்றுவது போன்ற சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. திட்டத்தை மாற்றியமைக்கும் பட்சத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் பேசி முடிவெடுக்கப்படும்'' என்றார்.