ADDED : மார் 23, 2025 04:53 AM

உசிலம்பட்டி : ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி உசிலம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நலச்சங்கத்தினர் பாலை ரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பசும்பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி ரூ.45 என அறிவிக்க வேண்டும்.
அரசு அறிவித்த ஊக்கத் தொகை ரூ.3ஐ, ஆரம்ப சங்கங்களின் மூலம் உறுப்பினர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பவேண்டும்.
மதுரை ஆவின் லாபத்தில் 50 சதவீத போனஸ் உடனே வழங்க வேண்டும்.
50 சதவீத மானியத்தில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாநிலத் தலைவர் முகமது அலி, மாநில பொதுச் செயலாளர் பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் வெண்மணிச்சந்திரன், முத்துப்பாண்டி, இன்பராஜ், நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் பெரியகருப்பன், உக்கிரபாண்டி மற்றும் கிளைச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.