/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.17 ஆயிரம் லஞ்சம் மின் போர்மேன் கைது
/
ரூ.17 ஆயிரம் லஞ்சம் மின் போர்மேன் கைது
ADDED : பிப் 21, 2024 06:24 AM

மதுரை: மதுரையில் தற்காலிக மின் இணைப்பு தர ரூ.17 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்போர்மேன் ஜான்கென்னடி 57, கைது செய்யப்பட்டார்.
மதுரை ஞானஒளிவுபுரம் பிரிட்டோ சகாயராஜ் 63. ஓய்வு பெற்ற டிரைவர்.
விளாங்குடி சங்கீத் நகரில் வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
அதை பரிசீலித்த விளாங்குடி மின் அலுவலக போர்மேன் ஜான்கென்னடி, ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். பிறகு நடந்த 'பேச்சுவார்த்தை'யில் ரூ.17 ஆயிரம் தருமாறு கேட்டார்.
இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் பிரிட்டோ சகாயராஜ் புகார் செய்தார்.
நேற்று மதியம் விளாங்குடி மின் அலுவலகத்தில் ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது ஜான்கென்னடியை இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, குமரகுரு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

