தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கூடல்புதுாரை தவிர்க்கும் மினி பஸ்கள்

கூடல்புதுாரை தவிர்க்கும் மினி பஸ்கள்

கூடல்புதுாரை தவிர்க்கும் மினி பஸ்கள்


ADDED : ஜன 31, 2025 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; மதுரை கூடல்புதுார் பகுதியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு அரசு பஸ் வசதி தேவையான அளவில் இல்லாததால், மினிபஸ் வசதி ஏற்படுத்த பட்டது. பெத்தானியாபுரம் - மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட், கூடல்நகர் முதல் தமுக்கம் பகுதிக்கு கூடல்புதுார் வழி செல்ல பெர்மிட் பெற்றுள்ளனர்.

ஆனால் கூடல்புதுார் வழி செல்லாமல் தடம் மாறிச் செல்கின்றன. கூடல்புதுார் பகுதி வழியாக மினிபஸ்கள் இயக்கப்படுவதில்லை. தமுக்கம் - கூடல்புதுார் பஸ்கள் ஆனையூரிலேயே நின்று விடுகின்றன. கூடல்புதுார் பகுதியினர் 2 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளதால் வயதானோர், பெண்கள் சிரமப்படுகின்றனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us