/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அ.தி.மு.க., ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட தென்பகுதிகள் ஸ்டாலினால் கவனம் பெற்றது' அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார்
/
'அ.தி.மு.க., ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட தென்பகுதிகள் ஸ்டாலினால் கவனம் பெற்றது' அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார்
'அ.தி.மு.க., ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட தென்பகுதிகள் ஸ்டாலினால் கவனம் பெற்றது' அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார்
'அ.தி.மு.க., ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட தென்பகுதிகள் ஸ்டாலினால் கவனம் பெற்றது' அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார்
ADDED : செப் 07, 2025 10:56 AM
மதுரை: ''அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் தென்பகுதி புறக்கணிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினால் திருநெல்வேலி முதல் திருச்சி வரை பாலம், மேம்பாலம், சாலைப்பணிகள் நடப்பதாக'' நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.190 கோடி மதிப்பீட்டில் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் 2100 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி ஆய்வு செய்தனர். கலெக்டர் பிரவீன்குமார் உடனிருந்தார்.
அமைச்சர் வேலு கூறியதாவது: மதுரையின் வடக்கு, தெற்கை இணைக்கும் கோரிப்பாளையம் மேம்பாலம்1300 மீட்டர் நீளம், செல்லுார் இணைப்பு பகுதி மேம்பாலம் 800 மீட்டர் நீளம் என ரூ.190 கோடிக்கான பணிகள் நடக்கிறது. பாலத்தால் பாதிக்கப்படுவதாக அமெரிக்கன் கல்லுாரி நிர்வாகம் நீதிமன்றம் சென்றதால் 4 மாத காலம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிமன்றத்தில் தெரிவித்தபடி நில எடுப்புக்கு மட்டும் ரூ.164 கோடி கொடுக்கப்பட்டு பணிகள் தொடர்கிறது. ஜன.,30க்குள் முடிக்க பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அதன் பின் 2 மாத காலம் கழித்து செல்லுார் மேம்பாலம் தயாராகும்.
ரூ.150 கோடியில் உருவாகும் சிவகங்கை ரோடு, கோமதி புரம் இணைப்பு மேம்பாலப் பணிகள் நவ.,30க்குள் முடிந்தவுடன் பாலம் திறக்கப்படும். மதுரை தெற்கு வாசல் - அவனியாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு ரயில்வே பாலத்தை விரிவுபடுத்த ஆய்வு மேற்கொண்டோம். ரூ.223 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆணை பிறப்பிக்கப்பட்டு புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.
விரகனுார் முதல் சக்குடி வரையான சுற்றுச்சாலை அமைப்பதற்காக ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டு நில எடுப்பு ப ணிகள் நடக்கிறது. ரூ.190 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான திட்டமிடல் பணி நடக்கிறது. வைகை தெற்கு வடகரை ரோடு பணி முடிந்து விட்டது. வடகரை ரோடு குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் சாலை வரை ரோடு கேட்கின்றனர். இதற்கான நில எடுப்புக்காக ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.65 கோடியில் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பிருந்த ஆட்சியில் தமிழகத்தின் தென்பகுதி புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருநெல்வேலி முதல் திருச்சி வரை பாலம், மேம்பாலம், சாலைப்பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் சுகுமாறன், ஆனந்த் உடனிருந்தனர்.