/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழகர்கோவில் ரோட்டை ஆய்வு செய்த அமைச்சர்
/
அழகர்கோவில் ரோட்டை ஆய்வு செய்த அமைச்சர்
ADDED : மே 22, 2025 04:25 AM
மதுரை: மதுரை-அழகர்கோவில் ரோடு பணிகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
மதுரையில் தி.மு.க.,வின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க அமைச்சர் வேலு நேற்று மதுரை வந்தார்.
மதுரை-அழகர்கோவில்இடையே ரூ.22.10 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. 95 சதவீதம் முடிவுக்கு வந்த ரோட்டை நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். மேலுார் - சிவகங்கை ரோடு பணிகளையும் ஆய்வு செய்தார்.
அவருடன் அமைச்சர் மூர்த்தி, அரசுச் செயலர் செல்வராஜ், கலெக்டர் சங்கீதா, தலைமைப் பொறியாளர்கள் சத்யபிரகாஷ், சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர்கள் மோகனகாந்தி, பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர்கள் ஆனந்த், பாலமுருகன், உதவிப்பொறியாளர் சக்திவேல், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உடன் சென்றனர்.