ADDED : ஜன 10, 2026 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரையில் ஜன.16ல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதியும், 17ல் அலங்காநல்லுாரில் முதல்வர் ஸ்டாலினும் போட்டிகளை துவக்கி வைக்க உள்ளனர்.
போட்டி நடைபெறும் வாடிவாசலுக்கு காளைகள் வரும் பகுதி, பார்வையாளர்கள் அமரும் காலரி, காளைகளை சேகரிக்கும் பகுதி, பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.
எஸ்.பி.,அரவிந்த், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் ராமச்சந்திரன், டி.எஸ்.பி., ஆனந்தராஜ், நகர செயலாளர் ரகுபதி, ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத் தலைவர் சாமிநாதன், இன்ஸ்பெக்டர் பிரகாஷ், அதிகாரிகள் உடனிருந்தனர்.

