/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் 47 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
/
தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் 47 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் 47 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் 47 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
ADDED : நவ 27, 2024 04:28 AM
மதுரை,: ''தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோர் 47 சதவீதத்தினருக்கு மேல் உள்ளனர்'' என மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கோவி.செழியன் பேசினார்.
மதுரையில் உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:
மருத்துவ கல்வித் துறையில் 7.5 இடஒதுக்கீடு விஷயத்தில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியை பெற இயலாத நிலையில் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்டது. இடஒதுக்கீடு கிடைத்தும் ஒரு மாணவி போதிய வசதியின்றி மருத்துவ படிப்பைத் தொடர இயலவில்லை என முன்பு தெரிவித்தபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முழுக் கல்விச் செலவையும் தானே ஏற்பதாக தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மருத்துவம் மட்டுமின்றி, பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட அனைத்திலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
இந்த இடஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி, விடுதி, பஸ் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும் என்றார். பொறியியல் கல்விக்கு மட்டும் ரூ.213 கோடி ஒதுக்கினார். நான் முதல்வன் திட்டத்தில் 27 லட்சம் மாணவருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இந்தாண்டு துவங்கிய தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 2 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் மதுரையில் துவங்கியுள்ளது. பிற பகுதியிலும் துவங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 47 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மாலையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. இரு கூட்டங்களிலும் தெரிவித்த கருத்துக்களை முதல்வரிடம் தெரிவித்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
கூடுதல் தலைமைச் செயலர் கோபால், தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம், கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், கலெக்டர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.