/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் துவக்கினார்
/
பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் துவக்கினார்
ADDED : ஜன 10, 2025 05:16 AM
மதுரை: மதுரை மாவட்டத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் மூர்த்தி ஒத்தக்கடை ரேஷன் கடையில் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நோக்கில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக்கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய தொகுப்புகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் 1389 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 651 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஜன.13 க்குள் அனைவருக்கும் முழுமையாக வழங்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ.,  கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சதீஷ்குமார், துணைப் பதிவாளர்கள் ஆசைத்தம்பி, வசந்தி, டி.எஸ்.ஓ., ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

